You are here: Home TAMIL NEWS கதம்பம் சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி பிரச்சாரத்தை தொடங்கினார்!

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி பிரச்சாரத்தை தொடங்கினார்!

Print

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் முன்பே அனைத்துக் கட்சிகளையும் முந்திக் கொண்டு அதிமுக முதல் ஆளாக தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது.

சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவின் கருப்பசாமி மறைவையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவிருக்கிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. ஆனால் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்துச்செல்வி போட்டியிடுவார் என்று ஜெயலலிதா அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட மோதலில் சங்கரன்கோவில் அதிமுகவுக்கு கெளரவ தொகுதியாகிவிட்டது.

திராணியிருந்தால் தனித்துப் போட்டியிடத் தயாரா? என ஜெயலலிதா கேட்க, ஆளுநர் ஆட்சியின் கீழ் தேர்தலை சந்திக்கிறேன் என கேப்டன் எகிற இப்பொழுது சங்கரன்கோவில் இரண்டு தரப்புக்குமே சங்கடகோவிலாகிப் போய்விட்டது.

இதனிடையே அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், கோகுல இந்திரா, நத்தம் விஸ்வநாதன், சிவபதி உட்பட 34 பேரை தேர்தல் பணிக்குழுவாக நியமித்தும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதிமுக அமைச்சர் குழு சங்கரன்கோவில் தொகுதியில் முகாமிட்டு "வியூகம்" வகுத்து வருகின்றனர்.

இன்னும் ஒருபடி மேலேபோய் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். இன்று தைப்பூசம் நல்ல நாள் எனக் கருதி முத்துச்செல்வி முந்திக் கொண்டு பிரச்சார பயணம் புறப்பட்டுவிட்டார்.

மற்ற கட்சிகளிடமிருந்து இதுவரை எந்த சத்தத்தையும் காணோம். குறிப்பாக சவாலை சந்திக்கத் தயார் என்று கூறி தேமுதிக குறித்து எந்தத் தகவலும் இல்லை.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி பிரச்சாரத்தை தொடங்கினார்!

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்